• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புத்தாண்டு கொண்டாடத்தின் போது கலச்சார சீரழிவுகளை உண்டாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

December 24, 2018 தண்டோரா குழு

ஆங்கில புத்தாண்டு கொண்டாடத்தின் போது கலச்சரா சீரழிவுகளை உண்டாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஹிந்து பாரத் சேனா சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவது வழக்கம் இதைதொடர்ந்து இனி வரும் 2019க்கான புத்தாண்டை பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவார்கள். இதில் சமுதாயத்திற்கு சீர்கேடு விளைவிக்கும் வகையில் கிளப் டான்ஸ் ,சாலையில் பைக் ரேஸ், பெண்களை கிண்டல் செய்வது, மதுபானங்கள் நடுசாலையில் அமர்ந்து அருந்துதல் போன்ற சீரழிவுகளை உண்டாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பண்பாட்டை காக்கவேண்டும் என்று வலியுறுத்தி ஹிந்து பாரத் சேனா அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதில் ஹிந்து பாரத் சேனா தலைவர் பாண்டி செயலாளர் ஜெகதீஷ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க