• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதுதில்லி துப்பாக்கி சூட்டில் தேடப்பட்ட குற்றவாளி கைது

February 6, 2017 தண்டோரா குழு

புது தில்லி வணிக, நிதி, மற்றும் வணிக மையமான நேரு பிளேஸ் என்னும் இடத்தில் காவல் துறையினருக்கும் திருட்டுக் கும்பலுக்கும் இடைய துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த குற்றவாளியைக் கைது செய்தனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது:

புது தில்லியில் பல நாட்களாகத் தேடப்பட்டு வந்த குற்றவாளி அக்பர். இவரது தலைக்கு 25,௦௦௦ ரூபாய் பரிசு என்று காவல் துறையினர் அறிவித்திருந்தனர்.

புது தில்லி வணிக, நிதி, மற்றும் வணிக மையமான நேரு பிளேஸ் அருகில் உள்ள ஈரோஸ் விடுதி அருகில் விடியற்காலை 2.3௦ மணியளவில் காவல்துறையினர் குற்றவாளிகளைப் பிடிக்க முயன்றபோது இச்சம்பவம் நடந்தது. இதில் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த குற்றவாளியைக் கைது செய்தனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புது தில்லி காவல்துறை துணை ஆணையர் ரோமில் பாணியா கூறியதாவது:

“அக்பர் மோசமான கொள்ளைக்காரன். பல வழிப்பறிகளைச் செய்து வந்தான். கொள்ளை, திருட்டு, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தவன். 2௦16ம் ஆண்டு டிசம்பர் மாதம் தெற்கு தில்லியில் உள்ள புல் ப்ரஹாடல்பூர் என்னும் இடத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. அவ்வழக்கில் தேடப்பட்டு வந்த அக்பர் தலைக்கு 25,௦௦௦ ரூபாய் பரிசு என்று காவல்துறை அறிவித்தது.

நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் முடிவில் காவல்துறையினர் அக்பர் என்கிற டேனிஷைக் கைது செய்தனர். ஆனால் அவனுடைய கூட்டாளியான ஆசிப் உள்ளிட்டோர் தப்பியோடிவிட்டனர். அவர்களைத் தேடி வருகிறோம். விரைவில் கைது செய்து சிறையில் அடைப்போம்.

குண்டு துளைக்காத ஜாக்கெட் அணிந்திருந்ததால் நடந்த துப்பாக்கி சண்டையில் தாக்கப்பட்ட இரண்டு காவலர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க