புதுச்சேரி மாநிலத்தில் இன்று விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்து ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு பிறகு 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி பிரஞ்சுக்காரர்களிடமிருந்து புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்தது.இந்த நாளை புதுச்சேரி விடுதலை நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது.
புதுச்சேரியின் விடுதலை நாளான இன்று கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
கொடியேற்ற நிகழ்சிக்கு பின்னர் பேசிய முதலமைச்சர் நாரயணசாமி,
புதுச்சேரி நகரம் தனது பாரம்பரியத்தையும், பழமை வாய்ந்த புராதான வரலாற்று சின்னங்களை பாதுகாக்கவும் ரூ.107 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ழந்தை இறப்பு விகிதத்தை குறைத்ததில் நாட்டிலே புதுச்சேரி மாநிலம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது எனவும் ,டெங்கு காய்ச்சல் பரவுதை தடுக்க எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வருவதகாவும் கூறினார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு