• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய 20 ரூபாய் நோட்டை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி

April 27, 2019 தண்டோரா குழு

பச்சையும்; மஞ்சளும் கலந்த நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.

இந்திய ரூபாய் நோட்டுக்கள் புதிதாக அச்சிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 20 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்டுள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாட்டின் கலாசார பாரம்பரியத்தை விவரிக்கும் வகையில் பின்புறத்தில் எல்லோரா குகைகளின் உருவத்துடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுவதாக தெரிவித்துள்ளது.

பச்சை மற்றும் மஞ்சல் நிறத்தில் அச்சிடப்பட்டுள்ள இந்த நோட்டில் முன்பக்கம் மகாத்மா காந்தியும் பின்பக்கத்தில் பாரம்பரியத்தை பறைச்சாற்றும் விதமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமான எல்லோரா குகையும் இடம்பெற்றுள்ளது.

இந்த புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் மக்களின் புழக்கத்திற்கு விடப்படும். ஏற்கனவே புழக்கத்தில் உள்ள அனைத்து 20 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க