• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய வாக்காளர்கள் பட்டியலில் வாக்காளர் பெயர் உள்ளதா என நாளை முதல் தெரிந்து கொள்ளலாம்

March 30, 2019 தண்டோரா குழு

2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம் ,வாக்காளர் பெயர் பட்டியல் என தேர்தல் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது .இதையடுத்து புதிய வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை நாளை முதல் அறிந்து கொள்ளலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏழு லட்சத்து 31 ஆயிரம் பேர் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்திருந்தனர். இதுதொடர்பாக சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ்,

தேர்தல் ஆணையம் 2 ஆம் கட்ட இறுதி வாக்காளர் பட்டியலை நாளை வெளியிட உள்ளதாகக் கூறினார். மேலும் சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டோருக்கு வாக்காளர் அடையாள அட்டை வரத் தாமதமாகும் என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்தார்.

மேலும் படிக்க