August 29, 2020
தண்டோரா குழு
4.0 எனப்படும் 4வது கட்ட ஊரடங்கு வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் ஊரடங்கில் தளர்வுகள் என்ன?
செப்டம்பர் 7ந் தேதி முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 21 முதல் 100 பேரை கொண்டு கலாச்சார, பொழுதுபோக்கு, விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தலாம்.செப்டம்பர் 21 முதல் 100 பேருடன் அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்தலாம். செப்டம்பர் 21 முதல் திறந்தவெளி அரங்குகளில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் 50 சதவீத ஆசிரியர்களை வரவழைத்து ஆன்லைன் வழியில் பாடம் நடத்தலாம். கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அல்லாத பகுதிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பரில் ஊரடங்கில் தடைகள் எதற்கு?
செப்டம்பர் 30ந் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.திரையரங்குகள், நீச்சல் குளங்கள் செப்டம்பர் மாதத்திலும் மூடப்பட்டிருக்கும். மத்திய அரசின் அனுமதி இல்லாமல் உள்ளூர் அளவில் ஊரடங்கு பிறப்பிக்க மத்திய அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.மாநில, மாவட்ட, கோட்ட, நகர, கிராம அளவிலான ஊரடங்குகளை மாநில அரசுகள் பிறப்பிக்க கூடாது. போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் கூடாது.மாநிலத்திற்கு உள்ளே மக்கள் சென்று வருவதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது.