June 27, 2020
தண்டோரா குழு
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு சொந்தமாக மருத்துவமைனை செயல்பட்டு வருகிறது. இம்’ மருத்துவ மனையின் நிர்வாகத்தை அவரது மனைவி கவனித்து வந்தார். இந்நிலையில் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் நிர்வாகித்து வந்த சங்கீதா மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளது. மேலும், டாக்டர். கிருஷ்ணசாமியின் வீடு தனிமைபடுத்தபட்டது என வீட்டின் முன்பாக சுகாதார துறையினர் நோட்டீஸ் ஓட்டி உள்ளனர். அதைபோல் டாக்டர். கிருஷ்ணசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நாளை கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.