• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய சிக்கலில் ரஜினியின் காலா

May 30, 2017 தண்டோரா குழு

காலா திரைப்படத்தின் தலைப்பு, கதைக்கரு தன்னுடையது என ராஜசேகர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தனுஷ் தயாரிப்பில் கபாலி படத்தை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் காலா. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 28ம் தேதி மும்பையில் துவங்கியது. மேலும், இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் அண்மையில் தனுஷ் வெளியிட்டார்.

இந்நிலையில், படப்பிடிப்பு துவங்கிய இரண்டே நாளில் தற்போது படத்திற்கு புதிய பிரச்சனை தொடங்கியுள்ளது.

காலா படத்தின் மீது ராஜசேகர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் 1996 ஆம் ஆண்டே காலா பெயரை தான் பதிவு செய்திருப்பதாகவும் காலா திரைப்படத்தின் தலைப்பு, கதைக் கரு தன்னுடையது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க