• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை எரிக்க முயற்சி மாணவர் அமைப்பினர் கைது

June 21, 2019 தண்டோரா குழு

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை கோவை காந்திபுரம் பேருந்திநிலையத்தில் வைத்து எரிக்க முயன்ற புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதிய கல்வி கொள்கை குறித்த வரைவு நகலை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கருத்தை ஜூன்மாதம் 30 ஆம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்கிற கால அவகாசத்தை வழங்கியுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய கல்விக்கொள்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் இக்கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து புரட்சிகர மாணவர்-இளைஞர் அமைப்பை சேர்ந்தவர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில், பேருந்து நிலையத்தில் வைத்து கல்விக்கொள்கையின் வரைவு நகலை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை குண்டுக்கட்டாக வேனில் ஏற்றி கைது செய்தனர். மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க