• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய அமைச்சரவையில் இடம் வேண்டாம் – மோடிக்கு அருண் ஜெட்லி கடிதம்

May 29, 2019 தண்டோரா குழு

நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் பெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கிறது. அவருடன் பங்கேற்க உள்ள அமைச்சர்கள் பட்டியலை பாஜக தலைவர் அமித் ஷா இறுதி செய்து வருகிறார். இதையொட்டி பா.ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜகவில் யார் யாரை மத்திய அமைச்சர்களாக நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் உடல் நிலை காரணமாக அமைச்சரவையில் இடம் வேண்டாம் என அருண் ஜெட்லி மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

உடல்நிலையை கருத்தில் கொண்டு ஓய்வெடுக்க விரும்புகிறேன். எனவே அமைச்சரவையில் எந்த பதவியும் வேண்டாம். ஏற்கனவே இது குறித்து வாய்மொழியாக மோடியிடம் தெரிவித்து இருந்தேன். அரசுக்கும் கட்சிக்கும் வெளியில் இருந்து அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என தெரிவித்துள்ளார்.

அருண் ஜெட்லி உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க