June 16, 2020
தண்டோரா குழு
கோவை பீளமேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் மாநகராட்சி ஆணையாளர் குறைகளை கேட்டறிந்தார்.
கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் 38 வார்டுக்குட்பட்ட பீளமேடு குப்பை மாற்று இடத்தின் இயந்திரம் பழுடைந்துள்ளதால் கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பழுதடைந்த இயந்திரத்தை உடனடியாக சரி செய்யுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.
மேலும், பீளமேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.