பீட்டா அமைப்பின் நெருக்கடியால், 146 ஆண்டுகளாக சர்க்கஸ் பணியை தொடந்து வந்த ‘ரிங்க்ளிங் சர்கஸ்’ தனது கடைசி நிகழ்ச்சியை மே 21-ம் தேதி நடத்தி விடைப்பெற்றது.
அமெரிக்காவில் இயங்கி வரும் ரிங்க்ளிங் சர்க்கஸ் நிறுவனம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சர்க்கஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. யானைகளைக் கொண்டு பல சாகச நிகழ்ச்சிகளை நடத்தி வந்ததால், அதுவே அந்த சர்கஸ் நிறுவனத்தின் முக்கிய அடையாளமாக விளங்கியது.
இந்நிலையில் யானைகளை பயன்படுத்தி நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று பீட்டா அமைப்பினர் அவர்களை வற்புறுத்தினர்.
இந்நிலையில் யானைகள் இல்லாமல் இனி அதனை தொடர முடியாது என்பதால், சர்க்கஸ் நிகழ்ச்சியை மூட போவதாக கடந்த ஜனவரி மாதமே அந்நிறுவனம் அறிவித்தது.
விலங்குகளை கொண்டு நடத்தப்படும் சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு எதிராக பீட்டா அமைப்பினர் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்தனர். இருப்பினும், சிங்கம், புலி, குதிரை, நாய், ஒட்டகம் ஆகியவற்றைக் கொண்டு ரிங்க்ளிங் சர்கஸ் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பீட்டா அமைப்பின் நெருக்கடியால் அந்த சர்க்கஸ் நிறுவனம் கடந்த 21-ம் தேதி மூடப்பட்டது.
“விலங்குகளை எவ்வகையிலும் துன்புறுத்தவில்லை, அவைகளை மனிதர்களைப்போல் தான் நடத்தி வருகிறோம்” என்று ரிங்க்ளிங் சர்க்கஸ் நிறுவனம் தெரிவித்தது.
“எங்களுடைய குதிரைகள், நாய்கள், 317 எடையை உடைய இரண்டு திறமை நிறைந்த பன்றி ஆகியவற்றை பார்ப்பதில் மக்களுக்கு அதிக விருப்பம்” என்று அந்நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
சர்க்கஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகி, கென்னெத் பெல்ட் கூறுகையில்,
“இதன் கடைசி நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்கள் கூட்டத்தை கண்டு எங்கள் உள்ளம் நெகிழ்ச்சி அடைந்தது. ரிங்க்ளிங் வலைத்தளத்தில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிப்பரப்பட்டது. ரிங்க்ளிங் சர்க்கஸ் நிகழ்ச்சியை 25௦ மில்லியன் மக்கள் கண்டு ரசித்துள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு