• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பீகார் முதலமைச்சரால் வரதட்சணை பணத்தை திருப்பி கொடுத்த மாப்பிளை வீட்டார்

October 17, 2017 தண்டோரா குழு

பீகாரில் முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியர் தனது மகனின் திருமணத்திற்காக வரதட்சணையாக பெற்ற 4 லட்சம் ரூபாயை பெண் வீட்டாரிடம் திருப்பி கொடுத்துள்ளார்.

பீகார் மாநிலத்தின் ஆரா மாவட்டத்திலுள்ள கவுரா கிராமத்தில் ஹ்ரின்றா சிங் என்னும் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவரது இளைய மகன் பிரேம் ரஞ்சன் மின்சார கடை நடித்தி வருகிறார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் அவருடைய திருமணத்திற்காக, பெண் வீட்டாரிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் வரதட்சணையாக சிங் வாங்கி இருந்தார்.

இந்நிலையில், அக்டோபர் 4ம் தேதி, அம்மாநிலத்தின் முதலமைச்சர் வரதட்சணை மற்றும் குழந்தை திருமணம் ஆகிய நடைமுறையை தவிர்க்க மக்கள் முன் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பால் கவரப்பட்ட சிங், பெண் வீட்டாரிடம் இருந்து வாங்கிய வரதட்சணை பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார்.

“என் இளைய சகோதரனின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு, மணமகளின் பெற்றோரிடம் 4 லட்சம் ருபாய் வரதட்சணையாக கேட்டிருந்தோம். அவர்களும் அந்த பணத்தை எங்களிடம் தந்துவிட்டனர். ஆனால், அக்டோபர் 4ம் தேதி பீகார் முதலமைச்சர் கொடுத்த அழைப்பில் ஈர்க்கப்பட்டோம். உடனே மணப்பெண்ணின் பெற்றோரிடமிருந்து வாங்கிய வரதட்சணை பணத்தை அவர்களிடமே திருப்பி கொடுத்தோம்” என்று மணமகனின் மூத்த சகோதரர் தெரிவித்தார்.

“எங்களிடம் இருந்து வரதட்சணையாக வாங்கிய பணத்தை திருப்பி தந்தபோது, மாப்பிளை வீட்டார் திருமணத்தை நிறுத்தி விட்டனரோ என்று எண்ணி, நாங்கள் குழப்பம் அடைந்தோம். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்ததற்கான காரணத்தை அறிந்தபோது, மகிழ்ச்சி அடைந்தோம். இப்படிப்பட்ட உயர்ந்த ஒழுக்க நெறிகள் கொண்ட குடும்பத்தில் இருக்கும் மகனை, என் சகோதரி திருமணம் செய்துகொள்ள போகிறாள் என்று எண்ணும்போது, மிகவும் பெருமையாக இருக்கிறது” என்று மணமகளின் சகோதரன் தெரிவித்தார்.

மேலும் படிக்க