• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி எஸ் ஜி மருத்துவமனையில் கொரோனா நோயிலிருந்து மீண்டோருக்காண புனர்வாழ்வு சிகிச்சை பிரிவு துவக்கம்

October 21, 2020 தண்டோரா குழு

பி எஸ் ஜி மருத்துவமனையில் கொரோனா நோயிலிருந்து மீண்டோருக்காண சிறப்பு வெளி நோயாளிகள் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டுள்ளது.

பி எஸ் ஜி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கென்றே உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு சுமார் 500 படுக்கை வசதிகளுடன் தனி கட்டிடத்தில் (B-Block) தனிமைபடுத்தப்பட்ட பிரிவாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இக்கட்டிடத்தில் கொரோனா காய்ச்சல் சிறப்பு சிகிச்சைப்பிரிவு, அவசர சிகிச்சைப்பிரிவு, கொரோனா தீவிர சிகிச்சைப்பிரிவு மற்றும் பொது வார்டு என அனைத்து வசதிகளுடன் வெகு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தின் அனைத்து ஊர்களிலிருந்தும் பி எஸ் ஜி மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகள் வந்து வெற்றிகரமாக சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்பிச்சென்றுள்ளனர்.
தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கோவை மாநகரில் உள்ள பி எஸ் ஜி மருத்துவமனை தான் கொரோனா நோயாளிகளுக்கு அதிக படுக்கை வசதிகள் ஏற்படுத்தி அதிகமான நோயாளிகள் குணமடைந்து சென்ற தனியார் மருத்துவமனையாகும்.சுமார் 6000-ற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் பி எஸ் ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீட்டிற்கு திரும்ப சென்றுள்ளனர்.

இவ்வளவு நோயாளிகளை கையாண்ட தமிழகத்தின் ஒரே தனியார் மருத்துவமனையாக பி எஸ் ஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திகழ்கிறது.இங்கு சிகிச்சை பெற்ற நோயாளிகள் சிகிச்சை முடிந்த பின்பு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்ற பின்பு வீட்டிலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி இருக்க மருத்துவர்களால் அறிவுறுத்தப் படுகிறார்கள்.14 நாட்கள் முடிந்த பிறகும் கொரோனா நோய் சிகிச்சை பெற்ற நோயாளிகள் ஒருவித பதட்ட நிலையிலேயே தனக்கு முழுவதுமாக குணமாகி விட்டதா இல்லையா என்று தெரியாமல் ஒருவித அச்சத்துடனேயே காணப்படுகின்றனர்.

இன்னும் சில நோயாளிகளுக்கு கொரோனா தொற்று வைரஸ் உடலில் இல்லாமல் போன பின்பும் அதனால் ஏற்பட்ட கூடுதல் உடல் உபாதைகள் தொடர்கிறது. இதை கருத்தில் கொண்டு பிஎஸ்ஜி மருத்துவமனை தற்போது கொரோனா நோயிலிருந்து மீண்டோருக்காண வெளி நோயாளிகள் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சிகிச்சை பிரிவு சிறப்பு மருத்துவர் குழுவினருடன் தனியாக துவங்கியுள்ளது.

இம்மருத்துவர் குழுவில் தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர், நுரையீரல் நல சிகிச்சை மருத்துவர், பொது மருத்துவர், பிசியோதெரபி, உணவியல் ஆலோசகர் உட்பட அனைவரும் ஒரே குழுவாக யாருக்கு என்னென்ன தேவை என்பதை நோயாளிகளிடம் கேட்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்கிறார்கள்.வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு 2 வாரங்கள் கழிந்த பின்பு வெளியே வரும் நபர்கள் அனைவரும் இந்த சிறப்பு கொரோனா வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவிற்கு வருகை புரிந்து இங்குள்ள சிறப்பு மருத்துவர்களுடன் கலந்தாலோசனை செய்து தங்களுக்கு உள்ள சந்தேகங்களையும், அச்சத்தையும் போக்கிக் கொள்ள வசதியாக இந்த சிறப்பு சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.

வார நாட்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணிமுதல் மதியம் 1 மணிவரை இந்த சிறப்பு பிரிவு செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
9894799432 என்ற பிரத்யேக எண்ணை அழைத்து முன்பதிவு செய்து கொள்ளலாம். கொரோனா அல்லாமல் மற்ற சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எவ்வித அச்சமும், தங்குதடையுமின்றி தனி கட்டிடத்தில் (A-Block) வழக்கமாக மருத்துவர்களுடன் கலந்தாலோசனை செய்து சிகிச்சை பெற்றுச்செல்லலாம்.
கொரோனா சிகிச்சையும், மற்ற நோய்களுக்கான சிகிச்சையும் இரு வேறு கட்டிடத்தில் தனித்தனியே செயல்படுகிறது.

மேலும் படிக்க