March 14, 2026
தண்டோரா குழு
PSG Institute of Medical Sciences & Research மனநலத் துறை மற்றும் Indian Psychiatric Society தமிழ்நாடு கிளை, கொங்குநாடு கிளை இணைந்து நடத்தும் 2026 ஆம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவர்களுக்கான பயிற்சி தொடக்க விழா கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டாக்டர் சையத் உம்மர் வரவேற்புரை நிகழ்த்தினார்.மனநலத் துறை மூத்த ரெசிடென்ட் மருத்துவர் பிரியதர்ஷினி இறை வணக்கப் பாடலை வழங்கினார்.
Indian Psychiatric Society தலைவர் டாக்டர் சி.சாதனந்த் தலைமை உரையாற்றினார்m PSG Institute of Medical Sciences & Research முதல்வர் டாக்டர் டி.எம்.சுப்பாராவ் தொடக்க உரையாற்றினார்.
Indian Psychiatric Society தலைவர் டாக்டர் வை.அருள் பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மனநல மருத்துவக் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.இந்த நிகழ்வில் Indian Psychiatric Society ஆண்டு அறிக்கையை அதன் கௌரவ பொதுச் செயலாளர் டாக்டர் என்.அருண்குமார் வழங்கினார்.
மனநல மருத்துவத்தில் பயிலும் முதுநிலை மாணவர்களின் அறிவையும் மருத்துவத் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சி திட்டம் நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் பலவேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் நாடு முழுவதிலும் இருந்து கலந்து கொண்டனர்.
இறுதியாக ஏற்பாட்டுக் குழு செயலாளர் டாக்டர் பிரதீப் பழனியப்பன் நன்றியுரை வழங்கினார்.