• Download mobile app
15 Feb 2026, SundayEdition - 3658
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி தொடக்கப்பள்ளியில் 80-ம் ஆண்டு முத்து விழா

March 31, 2023 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி அறநிலையத்தின் கீழ் செயல்படும் பி.எஸ்.ஜி தொடக்கப்பள்ளியில் 80-ம் ஆண்டு முத்து விழா பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

விழாவில் பள்ளியின் செயலர் என்.சி. நந்தகோபாலன் அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளியின் தலைமையாசிரியை ஜி.சந்திரகலா ஆண்டறிக்கை வாசித்தார். பி.எஸ்.ஜி அறநிலையத்தின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார். சிறப்பு விருந்தினராக பள்ளிக் குழு உறுப்பினர் ஷோபனா குமார் கலந்து கொண்டு பேசினார். எஸ்.எஸ். குளம் வட்டாரக் கல்வி அலுவலர் எம்.ரமேஷ் பாபு வாழ்த்துரை வழங்கினார்.

ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளியில் சிறப்பாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ,மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க