• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

June 23, 2017 தண்டோரா குழு

‘பி.எஸ்.எல்.வி., – சி 38’ ராக்கெட், 31 செயற்கை கோள்களுடன், இன்று விண்ணில் பாய்ந்தது.

இஸ்ரோ நிறுவனம், பி.எஸ்.எல்.வி., – சி 38 ராக்கெட் மூலம், ‘கார்ட்டோசாட் – 2’ செயற்கை கோளை, இன்று காலை, 9:29 மணிக்கு, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, விண்ணில் செலுத்தியது. மொத்தம் 31 செயற்கைக் கோள்களுடன் ‘பி.எஸ்.எல்.வி. சி–38’ விண்ணில் பாய்ந்தது.

இந்த கார்ட்டோசாட் – 2 செயற்கைக்கோள் பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல நோக்கத்திற்காக பயன்படும்.

மேலும், இந்த செயற்கைக்கோள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு விண்ணில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க