• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிஸ்கட், சாக்லேட், மசாலா பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு திட்டம்

January 24, 2019 தண்டோரா குழு

சாக்லேட், பிஸ்கட், மசாலா பொருட்கள் அடைத்து வைக்கப்படும் பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக 95 நிறுவனங்களுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை வித்தித்து உத்தரவிட்டதையடுத்து இந்த தடை கடந்த ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பிஸ்கட், சாக்லேட், சாம்பூ மற்றும் அழகு சாதன பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக நெஸ்ட்லே, டாபர் இந்தியா, பிரிட்டானியா, பெப்ஸிகோ, ரிலையன்ஸ், ஆச்சி, எம்.டி.ஆர், மற்றும் சக்தி மசாலா, அமுல் டெய்லி, பார்லே, ஆவின் மற்றும் கேட்பரி இந்தியா உள்பட 95 நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இது குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் தங்களது பொருட்களை விற்பனை செய்ய வேண்டுமெனில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் அந்த நிறுவனங்கள் பதிவு செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை கொண்ட பிளாஸ்டிக் கவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பவும் பெருநிறுவன பொருட்களின் கவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே சேகரிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட உள்ளது.

மேலும் படிக்க