• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிளிப்கார்ட்டின் 77% பங்குகளை கைபற்றியது வால்மார்ட் நிறுவனம்

May 9, 2018 தண்டோரா குழு

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வால்மார்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான்,உலகின் பல நாடுகளிலும் தன் வர்த்தகத்தை பலப்படுத்திவருகிறது.குறிப்பாக,இந்தியாவைச் சேர்ந்த பிளிப் கார்ட், ஸ்நாப்டீல் ஆகிய நிறுவனங்களுக்கு அமேசான் கடும் சவாலாக இருந்து வருகிறது.தற்போது பெங்களூருவில் 8 லட்சத்து 30 ஆயிரம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது பிளிப்கார்ட் நிறுவனம்.

33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருவதுடன்,ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது.இதனால் இந்திய ஆன்லைன் வர்த்தகத்தை வளைத்துபோட திட்டமிட்ட அமேசான்,பிளிப் கார்ட்டை வாங்க நடவடிக்கை எடுத்தது.ஆனால் இதை அறிந்த அமேசானின் போட்டி நிறுவனமான, அமெரிக்காவின் வால்மர்ட்டும் பிளிப் கார்ட்டுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது.இறுதியில் வால்மார்ட் நிறுவனத்திற்கே வெற்றி கிட்டியிருக்கிறது.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.பிளிப்கார்ட்டில் 9 ஆண்டுகள் தலைமை செயல் அதிகாரியாகவும்,பின்னர் நிர்வாக தலைவராகவும் இருந்த சச்சின் பன்சால், தன்னிடம் இருந்த ஐந்தரை சதவீத மொத்த பங்குகளையும் வால்மார்ட்டிடம் விற்று விட்டு வெளியேறி இருக்கிறார்.

கடந்த ஆண்டு புள்ளி விவரங்களின்படி பிளிப் கார்ட் நிறுவனத்தின் சொத்து மதிப்பு சுமார் 80,000 கோடி ரூபாயாகும்.நடப்பு ஆண்டில் இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என தெரியவந்துள்ளது.இதில் 77 சதவீத பங்குகளை வாங்க வால்மார்ட் ஒப்புக் கொண்டுள்ளது.மீதமுள்ள 23 சதவீத பங்குகளை பிளிப்கார்ட்டின் பின்னி பன்சால்,சீனாவின் டென்சான்ட் ஹோல்டிங்,டைகர் குளோபல் மேனேஜ்மன்ட் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் வைத்திருக்கின்றன.இதனால் இந்திய ஆன்லைன் சந்தையை வளைக்கும் அமேசானின் முயற்சிக்கு தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க