October 13, 2017
தண்டோரா குழு
பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் புயலில் சிக்கி மூழ்கிய சரக்கு கப்பலில் சென்ற 11 இந்தியர்கள் பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஹாங்காங்கை சேர்ந்த 33,205 டன் எடையுள்ள ‘எம்ரால்ட் ஸ்டார்’ என்னும் சரக்கு கப்பலில் 26 இந்தியர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த கப்பல் பசிபிக் பெருங்கடல் பகுதி வழியாக பயணித்தபோது புயலில் சிக்கியது. உடனே அந்த கப்பலிலிருந்து அபாய சிக்னல் வந்துள்ளது. பிலிப்பைன்ஸ் எல்லையில் இருந்து சுமார் 280 கிலோமீட்டர் தூரத்தில் இன்று(அக்டோபர் 13) கடலில் மூழ்கியது.
அந்த கப்பல் மூழ்கிய இடத்தில் பயணித்த 3 கப்பல்கள், கடலில் சிக்கியிருந்த 13 கப்பல் ஊழியர்களை மீட்டுள்ளது. கடலில் காணாமல் போன 11 பேரை தேடும் பணியில், ஜப்பான் நாட்டு கடலோர காவல்படை மற்றும் மூன்று விமானங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்றும்,அந்த பகுதியில் ஏற்பட்டிருக்கும் சூறாவளி மீட்பு பணிகளுக்கு தடையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.