• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரிட்டிஷ் தூதரகத்தில் தலைமை எலி பிடிப்பாளராக நியமிக்கப்பட்ட பூனை

November 25, 2017 தண்டோரா குழு

ஜோர்டான் நாட்டின் பிரிட்டிஷ் தூதரகத்தில் லாரென்ஸ் என்னும் பூனை தலைமை எலி பிடிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் தூதரகத்தால் ‘லாரன்ஸ்ஆப் அப்டோவ்ன்’ என்று அழைக்கப்படும் அந்த பூனை கடந்த மாதம் தான், விலங்குகள் காப்பகத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. அது தற்போது, ஜோர்டான் நாட்டின் தலைநகரான அம்மானில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்த்தில் தலைமை எலி பிடிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம், பதவியில் சேர்ந்த பிறகு, அதன் நடவடிக்கைகளை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ‘lawrencedipcat’ என்னும் ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டது. கணக்கு தொடங்கிய ஒரே மாதத்தில் அதை சுமார் 2,500 பேர் பின்தொடர்ந்துள்ளனர்; 6௦௦௦ ரசிகர்களும் அதற்கு கிடைத்துள்ளனர்.

தற்போது லாரன்ஸ் தனது வேலைத் திறமையைக் கண்டறியும் காலத்தை (probationary period) வெற்றிகரமாக முடித்ததை அடுத்து, பிரிட்டிஷ் தூதரகத்தில் பணியாற்றுவதால் கிடைக்கும் நன்மைகளை அனுபவித்து வருகிறது.

மேலும் படிக்க