• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக இமானுவேல் மேக்ரன்

May 8, 2017 தண்டோரா குழு

பிரான்ஸ் நாட்டில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரன் அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.

இந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலதுசாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மேக்ரன், மற்கீம் இடது சாரிகள் சார்பில் ஜீன்-லக் மெலன்சான் உட்பட 11 பேர் போட்டியிட்டனர்.

முதல் 2 இடங்களை பிடித்த இமானுவல் மேக்ரனும், லீ பென்னும் 2வது மற்றும் இறுதிகட்ட தேர்தலுக்கு முன்னேறினர். இதில், 65.1 சதவிகித வாக்குகள் பெற்ற இமானுவேல் மேக்ரன் பிரான்ஸ் நாட்டின் அதிபராக வெற்றிபெற்றுள்ளார்.

இமானுவேல் மேக்ரன் பிரான்ஸ் நாட்டின் அதிபராக பொறுப்பேற்ற பின் அவர் முன் வைக்கப்பட்டுள்ள சவால்கள்

முதலில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரான்ஸ் நாடு வெளியேறும் என்று இருந்த நிலையில், இம்மானுவேல் தனது தேர்தல் பிரசாரத்தில் அந்த ஒன்றியத்துடன் உறுதியான உறவை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். அவருடைய வெற்றிக்கு பிறகு, பேசிய அவர், “ஐரோப்பாவுடன் உறுதியான உறவு மீண்டும் கட்டியெழுப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும், பொதுவான நிதிக் கொள்கை, ஒரு கூட்டு நிதி மந்திரி, வங்கி தொழிற்சங்கத்தை நிறைவு செய்தல், ஜெர்மனியுடன் மீண்டும் இணைந்த உறவு ஆகியவை இம்மானுவேலின் ஐரோப்பிய நிகழ்ச்சி நிரலின் முக்கிய அம்சம்மாகும்.

இரண்டாவதாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறியது தவறானது என்றும், அதிலிருந்து வெளியேறிய மாநிலங்கள் ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் இருக்ககூடாது. இங்கிலாந்து வெளியேறியதால் அதனுடன் எந்த ஒரு வணிகத்தொடர்பும் பிரான்ஸ் நாடு வைத்துக்கொள்ளாது என்று தெரிவித்தார்.

மூன்றாவதாக, முன்னாள் பொருளாதார மந்திரியாக இருந்த இம்மானுவேல், வணிகத்தில் குறைப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றிய அவர், வணிகத்தை ஊக்குவிக்கவும், தொழில் முயற்சி செய்பவர்களுக்கு பிரான்ஸ் இன்னும் நட்பான முறையில் உதவி செய்யும்மென்று அவர் தெரிவித்தார்.

நான்காவதாக, பிரான்ஸ் நாட்டில் குடியேறுபவர்கள் பிரெஞ்சு மொழியில் சரளமாக பேச தெரிந்திருக்கவேண்டும். அகதிகள் அல்லாதவர்கள் நாட்டிற்குள் நுழைய முயற்சி செய்தால், அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும். அதோடு, ஐரோப்பிய ஒன்றிய எல்லை சுற்றி 5௦௦௦ வலுவான எல்லை பாதுகாப்பு படை உருவாக்கப்படும். பிரான்ஸ் நாடு தீவிரவாதிகளால் பல முறை தாக்கப்பட்டதை அடுத்து, 1௦,௦௦௦ புதிய காவல்துறை அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்கள்.

ஐந்தாவதாக, ஜூன் மாதம் 11ம் தேதி சட்டமன்ற தேர்தலும், 18ம் தேதி தேசிய சட்டமன்ற தேர்தலும் நடக்க இருப்பதால், அவருடைய நிரல்களுக்கு ஆதரவளிப்பதற்கும், சட்டங்களை நிறைவேற்றுவதற்கும் ஆதரவை பெறுவதற்கும் அவசரமாக பணியாற்ற வேண்டியது அவசியமாக இருக்கிறது.

மேலும் படிக்க