• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரான்ஸ் தேர்தலில் மக்ரோனின் கட்சி அபார வெற்றி

June 19, 2017 தண்டோரா குழு

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் அந்த நாட்டின் இளம் அதிபரான இம்மானுவேல் மக்ரோனின் “ரிப்பளிக் ஆன் தீ மூவ் கட்சி” அபார வெற்றி பெற்றுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் முதலில் குடியரசு தலைவர் தேர்தலும், அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலும் நடைபெறுவது வழக்கம். இரண்டாவது முறை பாரளுமன்ற தேர்தலில் பிரான்ஸ் குடியரசு தலைவர் இம்மானுவேல் மெக்ரோனின் கட்சி வெற்றிபெற்றது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஓர் ஆண்டிற்கு முன் தொடங்கப்பட்ட இம்மானுவேல் மெக்ரோனின் கட்சி(LREM), ஜூன் 11ம் தேதி முதல் கட்ட தேர்தலில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 18) நடந்தது. அன்று இரவு, எண்ணப்பட்ட 97 சதவீத வாக்குகளில், 577 இடங்களை கொண்ட தேசிய சட்டமன்றத்தில் இம்மானுவேல் மெக்ரோனின் கட்சி 3௦௦ இடங்களை பெற்று வெற்றி பெற்றது. இம்மானுவேல் மெக்ரோனின் கட்சியை எதிர்த்து போட்டியிட்ட Mouvement Democrate (MoDEM) கட்சி 41 இடங்களை பெற்றது.

வலதுசாரி தேசிய முன்னணி கட்சி வெறும் எட்டு இடங்களை வென்றது. கடந்த 5 ஆண்டுகளாக சோசியலிஸ்ட் கட்சி ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த முறை 41– 49 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.

பிரான்ஸ் வரலாற்றில் தீவிர அரசியல்வாதி இல்லாத மக்ரோன் கட்சி துவங்கிய ஒரே ஆண்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார். பிரான்ஸ் இளம் அதிபரின் இந்த வெற்றி உலகளவில் இளைஞர்கள் அரசியல் எழுச்சி பெறுவதற்கான முன்னுதாரணம்.

மேலும் படிக்க