• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிராங்க் ஷோ வீடியோக்களை எடுக்கவும் வெளியிடவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை!

April 3, 2019 தண்டோரா குழு

பிராங்க் ஷோ எனப்படும் குறும்பு படங்களை எடுக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை தடைவிதித்துள்ளது.

டிக் டாக் செயலியை தடைசெய்யகோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயநீதிமன்ற மதுரைக்கிளை வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சமூக தீங்கான ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீதிமன்றமே தடைவிதிக்க வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. “டிக் – டாக், தமிழ் மியூசிக்கலி போன்ற செயலிகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்கும் முன்பாக அரசே தடை விதிக்க வேண்டும். இதனால்,குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் மனநிலை பாதிக்கப்படுகிறது.இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் டிக் – டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டிய நீதிபதிகள் டிக்டாக் செயலியை தடை செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்த அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், பிராங்க் ஷோ போன்ற நிகழ்ச்சிகள் தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதாகவே கருதப்படும். இதுபோன்ற ஷோக்களில் ஏற்படும் அதிர்ச்சி காரணமாக உயிரிழப்புகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என கருத்து தெரிவித்த நீதிபதிகள் பிராங்க் ஷோ எனப்படும் குறும்பு வீடியோக்கள் எடுக்கவும், வெளியிடவும் தாடைவிதிப்பதாகவும் உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க