• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரபல ஹாலிவுட் காமெடி நடிகர் தூக்கிட்டு தற்கொலை!

February 23, 2019 தண்டோரா குழு

பிரபல ஹாலிவுட் படமான ஹேங்கோவரில் நடித்திருந்த காமெடி நடிகர் ப்ரோடி ஸ்டீவன்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள அவரது இல்லத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பிரபல காமெடியனான ப்ரோடி ஸ்டீவன்ஸ்(48), ஹாலிவுட்டில் சூப்பர்ஹிட்டான ஹேங்கோவர் 1 மற்றும் 2 திரைப்படங்களில் நடித்திருந்தார். ஹேங்கோவரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜாக் கலிபினாக்கிஸின் நெருங்கிய நண்பரான இவர், அவருடன் சேர்ந்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும், யூடியூப்பிலும், ஸ்டாண்ட்அப் காமெடி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியுள்ளார்.

ஏற்கனவே, மன அழுத்தம் காரணமாக அவர் மருத்துவ உதவியை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அது தொடர்பாக ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கூட நடித்திருந்தார். இந்நிலையில், நேற்று லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, ஸ்டீவன்ஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் ஹாலிவுட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க