• Download mobile app
18 Oct 2025, SaturdayEdition - 3538
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரபல சித்தார் இசைக்கருவி கலைஞர் உஸ்தாத் ரைஸ் கான் மறைவு

May 8, 2017 தண்டோரா குழு

பிரபல சித்தார் இசைக்கருவி கலைஞர் உஸ்தாத் ரைஸ் கான்(77) பாகிஸ்தானில் சனிக்கிழமை(மே 6) காலமானார்.

1939ம் ஆண்டு, இந்தியாவின் இந்தூர் நகரில் உஸ்தாத் ரைஸ் கான் பிறந்தார். அவருடைய குடும்பம் இசை வல்லுனர்களை கொண்ட குடும்பம். அவருடைய தாய்வழி தாத்தா இன்னாயத் அலி கான், இந்திய துணைக்கண்டத்தின் சித்தார் இசைக்கருவியை வாசிக்கும் பிரபலமானவர்களில் ஒருவராக கருதப்பட்டார்.

உஸ்தாத் ரைஸ் கான் தன்னுடைய மாமா வாலாயத் அலி கானிடமிருந்து இசையை கற்றுக்கொண்டார். தனது 5வது வயதில் மும்பையிலுள்ள சுந்தர் பி ஹால் என்னும் இடத்தில் தன்னுடைய முதல் இசை நிகழ்ச்சியை நடத்தினார்.அப்போதைய இந்திய ஆளுநர் அவருடைய இசை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, அவருடைய திறமையை பாராட்டியுள்ளனர்.

கான் பல நாடுகளுக்குச் சென்று தனது இசையால் மக்கள் மனததை கவர்ந்தார்.அதன் பிறகு, போலாந்து நாட்டிற்கு தன்னுடைய முதல் சர்வதேச பயணத்தை மேற்கொண்டார். பின்னர் 1963ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் தனது இசை நிகழ்ச்சியை நடத்தினார். 1968ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டிற்கு குடிபெயர்ந்த அவர், 1979ம் ஆண்டு பல்கீஸ் பேகம் என்பவரை சந்தித்தார். அவர் ஒரு இசை கலைஞர் கூட. பல்கீஸ் பேகத்தை அடுத்த ஆண்டே திருமணம் செய்துக்கொண்டார்.

லதா மங்கேஷ்கர் தனது ட்விட்டரில்,

“சித்தார் கலைஞர் உஸ்தாத் ரைஸ் கான், காலமான செய்தி வருத்தத்தை அளிக்கிறது. என்னுடைய ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

பாகிஸ்தான் பாடகர் அலி ஜாபர் தனது ட்விட்டரில்,

“அவருடைய மறைவு மிகவும் வருத்தத்தை தருகிறது.அவருடன் இருந்த நாட்களின் அற்புதமான நினைவுகளை என் இருதயத்தில் வைத்துள்ளேன். கடவுள் அவருடைய ஆன்மாவை ஆசிர்வதிப்பாராக” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், 2௦௦5ம் ஆண்டு “ஜனாதிபதி விருதும்”, 2௦௦7ம் ஆண்டு “சித்தாரா எல்ம்டியாஸ்” விருதும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க