September 15, 2017 
தண்டோரா குழு
                                அமெரிக்காவில் பிரபல சாக்லேட் நிறுவனம் தயாரித்த சாக்லேட்டில் புழுக்கள் இருப்பதாக  பெண் ஒருவர் வெளியிட்ட காணொளி இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 
அமெரிக்காவைச் சேர்ந்த  ரேச்சல் வைல் என்பவர் பிரபல சாக்லேட் நிறுவனம் தயாரிக்கும் சாக்லேட் பெட்டியை வாங்கினார். வீட்டிற்கு திரும்பிய அவர், சாக்லேட் பெட்டியில் இருந்த சாக்லேட்டை திறந்தபோது, அதில் புழுக்கள் இருப்பதைக் கண்டார். இதைத்தொடர்ந்து அவர் பிரித்த அனைத்து சாக்லேட்டிளும் புழுக்கள் இருப்பத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
உடனே அந்த சாக்லேட் குறித்து காணொளி ஒன்று எடுத்து, அதை சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பதிவிட்டார். மேலும், அந்த நிறுவனத்தின் சாக்லேட்டை யாரும் வாங்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். தற்போது இந்த காணொளி வைரலாக பரவி வருகிறது. 
சமூக வலைதளத்தில் அந்த சாக்லேட் காணொளி வைரலாக பரவியதை அடுத்து, அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், ரேச்சலை  தொடர்புக்கொண்டு, “எங்கள் நிறுவனம் தயார் செய்யும் சாக்லேட் சுகாதாரம் ஆனது தான். சரியான முறையில் சாக்லேட்டை பாதுகாக்கப்படாததே அதற்கு முக்கிய காரணம். இதுக்குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று  தெரிவித்துள்ளார்.