April 30, 2020
தண்டோரா குழு
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
பாலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் நடிகர் ரிஷிகபூர்.1970 மற்றும் 80-களில் புகழ்பெற்ற நடிகராக இருந்தவர். 1973-ல் வெளியான ‘ பாபி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ரிஷிகபூர் மூச்சு திணறலால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரைபிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
நேற்று பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் மரணமடைந்தார்.இன்று மேலும் ஒரு நடிகர் மரணமடைந்ததால் பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.