• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பியானோ வாசித்த கரடி

June 6, 2017 தண்டோரா குழு

பூட்டிய வீட்டிற்க்குள் ஒரு கரடி நுழைந்து, அங்கு வைத்திருந்த பியானோவை வாசித்தக் காட்சி
அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.இந்த காட்சி அங்கு இருந்த பாதுகாப்பு கேமாராவில் பதிவாகியிருந்தது.

அமெரிக்க நாட்டின் கொலராடோ மாநிலத்திலுள்ள The Vail என்னும் இடத்தில் பெண் ஒருவர் வசித்து வருகிறார்.அவர் மே 31ம் தேதி வெளியே சென்றுள்ளார். அவர் திரும்பி வந்துபோது, வீடு, திருடர்கள் நுழைந்து சேதப்படுத்தியது போல இருந்தது. உடனே அவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் வந்து வீட்டை சோதனை செய்தனர். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமாராவை சோதனை செய்த போது, அதில் பதிவு செய்யப்பட்ட காட்சி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. தன்னுடைய வீட்டில் நுழைந்தது திருடர்கள் அல்ல, ஆனால் வந்திருந்தது ஒரு கரடி என்று தெரிந்தது.

“உணவு தேடி அந்த பகுதிக்கு வந்த கரடி, சமையல் அரை ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்துள்ளது. பிரிட்ஜில் வைக்கபட்டிருந்த உணவுகளை எடுத்து சாப்பிட்டு, வீட்டை சுற்றி வந்துள்ளது. முன்னறையில் வைக்கபட்டிருந்த பியானோவில் சிறிது வினாடிகள் தனது கையை வைத்து நின்றுவிட்டு சென்றுவிட்டது. நாங்கள் அதை பிடிக்க வீடு முழுவதும் தேடினோம். ஆனால், வீட்டிலிருந்து எப்படியோ வெளியேறிவிட்டது” என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

மேலும் படிக்க