• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிப்.,21ல் கட்சி பெயர் – கமல் அறிவிப்பு

January 17, 2018 தண்டோரா

பிப்.,21ம் தேதி ராமநாதபுரத்தில் இருந்து அரசியல் சுற்றுப்பயணத்தை துவங்கவிருக்கும் கமல் தனது கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தான் அரசியல் கட்சி துவங்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்து விசில் என்ற செயலியையும் துவங்கியிருந்தார்.

இந்நிலையில் கமல்ஹாசன் அறிக்கையில் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,
என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்திற்கு நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். நன்றியை தாண்டி கடமைகள் நிறைய இருக்கிறது. அக்கடமைகளின் துவக்கமாக மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து வருகிற பிப்ரவரி 21ம் தேதி துவக்க இருக்கிறேன். மக்களுடனான இந்த சந்திப்பு புரட்சிக்காகவோ, கவர்ந்திழுக்கவோ அல்ல; எனது புரிதல் மற்றும் எனது கல்விக்காக மட்டுமே.குடியரசில் குடிமக்களை உயர்த்த வேண்டும். அதை நோக்கி என் பயணம் இருக்கும். நாம் சேர்ந்து தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும்.அதுவே ஜனநாயகம்.கரம் கோரத்திடுங்கள்; களத்தில் சந்திப்போம். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கமல் முதற்கட்டமாக மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளார்.

ஏற்கனவே ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து வெளியிட்டுள்ள நிலையில், தற்போது கமலும் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க