• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிப் 14ஆம் தேதி மனித உயிரை காக்கும் மருத்துவமனையின் வெள்ளி விழாவில் மருத்துவர்கள் கொண்டாட்டம்

February 10, 2020

கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி சிறப்பு மருத்துவமனையில், நரம்பியல் துறை சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு வரும் பிப்ரவரி 14ம் தேதி வெள்ளிக்கிழமை மருத்துவமனை கலையரங்கத்தில் வெள்ளிவிழா ஆண்டு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு இன்று காலை நடைபெற்றது. இதில் பி.எஸ்.ஜி சிறப்பு மருத்துவமனை இயக்குனர் “புவனேஸ்வரன்”, நரம்பியல் அறுவைச் சிகிச்சை துறை பேராசிரியர் “ராஜ்குமார்” ஆகியோர் கூறுகையில்,

வெள்ளி விழாவில் பி.எஸ்.ஜி அறக்கட்டளை தலைவர் ஜி.ஆர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளதாகவும், பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை வகிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் வெள்ளிவிழா ஆண்டையொட்டி, இந்த ஒரு வருடம் முழுவதும் சிறப்பு கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற உள்ளதாகவும், 8000 மூளை அறுவை சிகிச்சையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருதய அறுவை சிகிச்சை மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு சலுகை கட்டணத்திலும், அரசு காப்பீட்டு திட்டத்தின் மூலமும் மருத்துவ சேவைகளை பி.எஸ்.ஜி மருத்துவமனை அளித்து வருவதாகவும். வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, பி.எஸ்.ஜி செயலியை அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றும் தெரிவித்தனர்.மேலும் விபத்தின் போது தலையில் ஏற்படும் காயங்கள் மற்றும் அவசர உதவி சிகிச்சைக்கு 7449 I08 108 எண்ணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றனர். பேட்டியின்போது டாக்டர் ராஜேந்திரன், பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க