• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்

September 25, 2020 தண்டோரா குழு

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலகுறைவால் இன்று காலமானார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனாவால்
பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இவருக்காக பலரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், கடந்த மாதத்தின் இறுதியில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து எக்மோ மற்றும் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். மேலும், கொரோனா தொற்றில் இருந்து மீண்டதாகவும், பிஸியோதெரபி சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்பட்டது. ஆனால்,நேற்று மாலை எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், அதிகபட்ச உயிர் காக்கும் கருவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. செங்குன்றத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் இறுதி சடங்கு நடைபெறுமென அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று மதியம் 1.04 மணியளவில் எஸ்.பி.பி உயிர் பிரிந்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு தகவல் தெரிவித்தார்.

மேலும் படிக்க