June 10, 2025
தண்டோரா குழு
உயர்தர வீட்டு உபயோகப் பொருட்களின் உலக முன்னணி நிறுவனமான பிஎஸ்ஹெச் ஹவுஸ்ஜெரேட் ஜிஎம்பிஹெச்-ன் துணை நிறுவனமான பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ் பிரைவேட் லிமிடெட், தனது முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறந்துள்ளது.
ஆர்.எஸ்.புரத்தில்,டி.வி.சுவாமி சாலை (கிழக்கு) இல் அமைந்துள்ள இந்த ஸ்டோர், வெறும் சில்லறை விற்பனை நிலையமாக இல்லாமல்,தொழில்நுட்பத்துடன் இணைந்த, புதுமையான வாழ்க்கைக்கான ஒரு வழிகாட்டியாக அமையும்.சீமென்ஸின் உலகளாவிய சில்லறை விற்பனைத் தரங்களுக்கு இணங்க அமைக்கப்பட்ட இந்த புதிய ஸ்டோர்,தென் இந்தியாவில் அதிகரித்து வரும் சீமென்ஸ் பொருட்களுக்கான தேவைக்கு ஒரு நவீன விரிவாக்கத்தைக் குறிக்கிறது.
இந்த பிராந்தியத்தில் சீமென்ஸ் நிறுவனம், ஜனவரி-மே 2025 காலகட்டத்தில் 2024 ஐ விட 30% க்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளதுடன், தொடர்ந்து வலுவான இரட்டை இலக்க வளர்ச்சியையும் கண்டு வருகிறது.1,415 சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கும் புதிய சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர், சீமென்ஸின் உயர்தர உள்கட்டமைப்புடன் தயாரிப்புகளின் அற்புதமான தொகுப்பை காட்சிப்படுத்துகிறது.
இதில்,சமையல் முறைகளைக் கற்றுக்கொள்ளும் நுண்ணறிவுள்ள ஓவன்கள், கட்டுப்பாடுகளை எளிதாக்கும் இண்டக்ஷன் ஹாப்கள் , மற்றும் தினசரி வசதிகளை மேம்படுத்தும் ஸ்மார்ட் உபகரணங்கள் ஆகியவை அடங்கும்.ஸ்மார்ட் சமையலறை ஆலோசனை மண்டலங்கள் மற்றும் நேரடி செயல் விளக்கங்கள் வாயிலாக, அதிநவீன தொழில்நுட்பம், நுட்பமான வடிவமைப்பு மற்றும் ஜெர்மன் பொறியியல் திறன்கள் ஆகியவை இணைந்து, சமையலறையை ஒரு உயர்தர, செயலாற்றல் மிக்க இடமாக எவ்வாறு மாற்றுகின்றன என்பதை நுகர்வோர் இங்கு நேரடியாகக் கண்டறியலாம்.
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ் இந்தியாவின் எம்டி & சிஇஓ சைப் கான் இந்த ஸ்டோர் குறித்துப் பேசுகையில்,
இங்குள்ள எங்கள் புதிய சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் வெறும் சில்லறை வர்த்தக விரிவாக்கம் மட்டுமல்ல; இது தென்னிந்தியா முழுவதும் உள்ள ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன வீட்டுத் தொழில்நுட்பத்தைக் கிடைக்கச் செய்வதைப் பற்றியது.கோயம்புத்தூரில் புதிய சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் ஜூன் 9 ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது.
துல்லியம், நம்பகத்தன்மை, மற்றும் நேர்த்தியான வடிவமைப்புடன் புதுமை மற்றும் அழகியலை ஒருங்கிணைத்து, நவீன வாழ்க்கை முறையை மேம்படுத்தும் சீமென்ஸ் உபகரணங்களின் சிறப்பம்சங்களை இந்த ஸ்டோர் பிரதிபலிக்கும்.கோயம்புத்தூரில் மூன்று பிஎஸ்ஹெச் பிரத்தியேக விற்பனை நிலையங்கள் இரண்டு போஷ் மற்றும் ஒரு சீமென்ஸ் திறக்கப்பட்டதன் மூலம், தென் இந்தியாவில் பிஎஸ்ஹெச்-ன் சில்லறை விற்பனை உத்தி மேம்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய அளவில், பிஎஸ்ஹெச் தனது வாடிக்கையாளர்களுக்கு 16 கிளை சேவை அலுவலகங்கள், 350-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சேவை கூட்டாளர்கள் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற சேவை தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் சேவை அளிக்கிறது. 175 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன் சீமென்ஸ் முன்னணியில் உள்ளது.” என்று கூறினார்.