• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிஎஸ்ஜி மருத்துவமனை மற்றும் சென்னை எம் ஜி எம் ஹெல்த்கேர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

January 7, 2021 தண்டோரா குழு

கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையானது,உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான தமிழக அரசால் சிறப்பு அனுமதி பெற்ற மருத்துவமனை என்பது அனைவரும் அறிந்ததே.! இங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.இதுவரை பல நோயாளிகளுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலமாக மறுவாழ்வு கிடைத்துள்ளது.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையானது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக செய்யப்படுகிறது.மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து உடல் உறுப்பு தானம் மூலமாக அவரின் சிறுநீரகம்,கல்லீரல்,கணையம், பித்தப்பை, நுரையீரல் மற்றும்,இதயம் போன்ற பல உடலுறுப்புகளை தானமாக பெற்று மற்றொருவருக்கு பொருத்தப்படுகிறது.

தற்போது பிஎஸ்ஜி மருத்துவமனை இந்தச் சேவையை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது. சென்னையில் உள்ள எம் ஜி எம் ஹெல்த்கேர் மருத்துவமனைக்கும், கோவை பிஎஸ்ஜி மருத்துவமனைக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இன்று பி எஸ் ஜி மருத்துவமனை கருத்தரங்க கூடத்தில் இந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பி எஸ் ஜி அறநிலையத்தின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்வில்,இவ்விரண்டு மருத்துவமனை உயர் மருத்துவ அதிகாரிகளுக்கிடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது குறித்து பி எஸ் ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குனர், Dr. J.S. புவனேஸ்வரன் கூறுகையில்,

இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இருதயம் மற்றும் நுரையீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவையுள்ள நோயாளிகளை இரண்டு மருத்துவமனைகளிலும் வைத்து அறுவைசிகிச்சை செய்து கொள்ளலாம். இரண்டு மருத்துவமனைகளிலுள்ள உடலுறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவர் குழுவினரும் இணைந்து செயல்படுவார்கள். தமிழகம் மற்றும் இந்தியாவின் எந்த பகுதியிலுள்ள நோயாளிகளும் இங்கு வந்து உடலுறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்ளலாம். இரண்டு மருத்துவமனைகளிலுமுள்ள மருத்துவ வல்லுநர்கள் இருதய, நுரையீரல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயத்திலுள்ள நோயாளிகளின் நிலை குறித்து பரஸ்பரம் தகவல்களை பரிமாறிக்கொண்டும், கண்காணித்து கொண்டும் இருப்பார்கள். இதனால் எந்த நேரத்திலும் தங்கு தடையின்றி உடனடியாக நுரையீரல் மற்றும் இருதய மாற்று அறுவைசிகிச்சை நோயாளிகளுக்கு மாற்று உறுப்புகள் கிடைத்தவுடன் அறுவை சிகிச்சை நடைபெறும். இவ்விரண்டு மருத்துவமனைகளிலும் உடலுறுப்புகளின் செயல்பாடு குறைந்து வெளிநோயாளிகளாக சிகிச்சைபெற்றுக் கொண்டு,உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்ய காத்திருக்கும் நோயாளிகள், உடல் உறுப்புகள் தானமாக கிடைத்த உடன் இவ்விரண்டு மருத்துவமனைகளில் தமது பகுதிக்கு அருகாமையில் உள்ள மருத்துவமனையிலேயே வைத்து அறுவைசிகிச்சை செய்வதற்கும் வாய்ப்பாக அமையும் என்றார்.

மேலும் படிக்க