• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் ‘தி கான்ஃப்ளுயன்ஸ் 2026’ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப உச்சிமாநாடு.

February 8, 2026 தண்டோரா குழு

கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி (PSG College of Technology) மற்றும் இன்ஸ்டிட்யூஷன்’ஸ் இன்னோவேஷன் கவுன்சில் (Institution’s Innovation Council) சார்பில், ‘தி கான்ஃப்ளுயன்ஸ் 2026’ என்ற ஆராய்ச்சி,கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப உச்சிமாநாடு நடைபெற்றது. இந்நிகழ்வு பிஎஸ்ஜி டெக் வளாகத்தில் உள்ள நூற்றாண்டு விழா அரங்கில் (Centenary Auditorium) நடைபெற்றது.

இந்த உச்சிமாநாட்டில் கல்வித்துறையினர் மற்றும் தொழில்முறை வல்லுநர்கள் பங்கேற்கும் கலந்துரையாடினார்.இதில் கண்டுபிடிப்புகள்,வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.மேலும்,முன்னணி தொழில் தலைவர்களின் முக்கிய உரைகளும் நடைபெற்றது.இந்த நிகழ்வில் நேரடிப் பயிலரங்குகள் (Hands-on workshops), யோசனை முன்வைப்பு அமர்வுகள் (Idea pitching), போஸ்டர் விளக்கக்காட்சிகள் (Poster presentations) மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் கண்காட்சி (Innovators’ Exhibit) ஆகியவை இடம்பெற்றுள்ளது.

இது பங்கேற்பாளர்களுக்குத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும்,புதிய கூட்டு முயற்சிகளை உருவாக்கவும் ஒரு சிறந்த தளமாக அமைந்துள்ளது.தொடக்க விழா: இந்தியாவின் முன்னாள் ஜி20 ஷெர்பா (G20 Sherpa) மற்றும் நிதி ஆயோக்கின் (NITI Aayog) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் ஐஏஎஸ் (ஓய்வு) அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்புரை ஆற்றினார்.

சிறந்த நிர்வாகச் சீர்திருத்தவாதியாகவும், பொதுக் கொள்கை நிபுணராகவும் அறியப்படும் இவர்,இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ (Make in India) திட்டத்தின் வடிவமைப்பாளர் ஆவார். மேலும், ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ (Startup India) மற்றும் ‘இன்க்ரெடிபிள் இந்தியா’ (Incredible India) ஆகிய பிரச்சாரங்களின் பின்னணியில் ஒரு முக்கிய சக்தியாகச் செயல்பட்டவர்.

இந்தியாவின் முக்கிய கண்டுபிடிப்பு, தொழில் மற்றும் பொருளாதார முன்னெடுப்புகளை வடிவமைத்ததில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.விழாவில் கோயம்புத்தூர் அக்குவா குழுமத்தின் (AQUA GROUP) நிர்வாக இயக்குநர் ஆர்.குமரவேலு அவர்கள் கௌரவ விருந்தினராகப் பங்கேற்றார்.பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கே. பிரகாசன் தலைமை வகித்தார்.

ஆராய்ச்சி கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்து கல்வித்துறை மற்றும் தொழில்துறைக்கு இடையே கருத்துப் பரிமாற்றம் மற்றும் கூட்டு பங்களிப்பை ஊக்குவிக்கும் மேடையாக ‘தி கான்ஃப்ளுயன்ஸ் 2026’ அமைந்துள்ளது.

மேலும் படிக்க