• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியின் வைர விழாவில் புதிய லோகோ வெளியீடு !

January 20, 2023 தண்டோரா குழு

கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியில் நடைபெற்ற வைர விழா நிகழ்ச்சியில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் புதிய லோகோவாக கே.சி. டபிள்யூ K.C.W எனும் கிருஷ்ணம்மாள் காலேஜ் ஃபார் உமன் எனும் லோகோ வெளியீடு செய்யப்பட்டது.

கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் நிறுவனர் தினம் மற்றும் வைரவிழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.நிர்வாக அறங்காவலர் ஜி. ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில்,கல்லூரியின் தலைவர் நந்தினி ரங்கசாமி முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினர்களாக,சென்னை டி.வி.எஸ் சப்ளை செயின் சொல்யூசன்சின் துணைத்தலைவர் தினேஷ், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் இவாஞ்சலிஸ்ட் ஆலோசகர் சௌத்ரி நூதனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வைர விழாவை கொண்டாடும் விதமாக கடந்த கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் புதிய K.C.W கே.சி.டபிள்யூ எனும் நவீன லோகோ வெளியிடப்பட்டது.கிருஷ்ணம்மாள் காலேஜ் ஃபார் வுமன் என இனி வரும் காலங்களில் அழைக்கும் வகையில் புதிய லோகோவை வெளியீடு செய்துள்ளதாக கல்லூரியின் தலைவர் நந்தினி ரங்கசாமி மற்றும் பேராசிரியர் பாலசுப்ரமணியம் ஆகியோர் தெரிவித்தனர்.

முன்னதாக நடைபெற்ற விழா துவக்க நிகழ்ச்சியில் கல்லூரி மாணவியர்களின் தேசிய மாணவர்படை அணிவகுப்புடன் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில்,408 மாணவியர் இணைந்து பெண் சக்தியை சித்தரிக்கும் வகையில் நடனமாடி அசத்தினர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில், ஜி ஆர் ஜி இன்குபேட்டரை சிறப்பு விருந்தினர் சவுத்ரி அறிமுகப்படுத்தினார் ஜி ஆர் ஜி சென்ட்ரல் ஆஃப் எக்ஸ்லென்ஸ் இன் லைஃப் சயின்ஸ் துறையை சிறப்பு விருந்தினர் தினேஷ் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து பெங்களூரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் தியோடர் பாஸ்கரனுக்கு ஜி ஆர் ஜி நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருதும், பிராண்ட் அம்பாசிடர் விருது பேராசிரியை அகிலா ராஜேஸ்வர்,கீதா ராம் மற்றும் விமலா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஜி.ஆர்.ஜி நிறுவனங்களைச் சேர்ந்த 28 பணியாளர்களுக்கு நீண்ட நாள் சேவை விருதும்,சிறப்பு விருதுகளாக கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் நிர்மலா மற்றும் முன்னாள் தேர்வு கட்டுப்பட்டாளர் கீதா முகுந்த் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

மேலும் படிக்க