• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பா.ஜக தமிழகத்திற்கு எந்த துரோகமும் செய்யவில்லை – எஸ்பி.வேலுமணி

June 13, 2019 தண்டோரா குழு

பா.ஜக தமிழகத்திற்கு எந்த துரோகமும் செய்யவில்லை, திமுக- காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்த போது தான் தமிழகத்திற்கு துரோகம் செய்யப்பட்டுள்ளது.

கோவைப்புதூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 4ஆம் அணியில் பணியிபுரியும் காவலர்களுக்கு 10.88 கோடி ரூபாய் மதிப்பில் 137 அடிக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு இன்று முதல்வர் காணொளி காட்சி மூலம் துங்கி வைத்தார். கோவைபுதூர் சிறப்பு காவல் 4ஆம் அணி வளாகத்தில் நடைபெற்ற காணொளி காட்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

சென்னையில் நேற்று நடத்த கூட்டம் , தேர்தலுக்கு பின் நடக்க ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஆலோசனை கூட்டம். இதில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது ஏன் , கட்சியை பலப்படுத்துவது, உள்ளாட்சி தேர்தலுக்கு தாயாரவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் சகோதரர்கள் போல் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்துகிறார்கள். இதில் எந்த பிரச்சனையும் இல்லை. . தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி உட்பட 9 சட்டமன்ற தொகுயில் வெற்றி பெற்ற மக்கள் வாக்களித்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் இது தொடரும். ஊடகங்கள் மட்டும் அல்ல எதிர்கட்சியும் கட்சிக்குள் ஏதாவது நடக்கும் என எதிர்பார்கிறார்கள். ஆனால் அதுபோல எதுவும் நடக்காது. இது மிகப்பெரிய பேர் இயக்கம்.

தொண்டர்கள் என்ன எதிர்பார்கிறார்கள் அதற்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டும். என்பதற்காக தான் நேற்று கூட்டம் நடத்தப்பட்டது.மத்தியில் தண்ணீர் மேலாண்மை குறித்த கூட்டதிற்கு சென்றதாகவும் அப்போது மத்திய அமைச்சர் பியூஸ்.கோயல் , மற்றும் அமித்ஷாவை சந்தித்து கோரிக்கைகளை முன் வைத்ததாகவும் தமிழகத்தின் அனைத்து தேவையும் நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதி அளித்தாகவும் கூறினார்.

தமிழகத்தில் 5 ஆயிரம் கோடி நிதியில் தண்ணீர் விநியோகத்திற்கான திட்டங்ள் செயல்படுத்தி வருகிறதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் இயற்கையான வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதை எப்படி சரிவது என திட்டமிட்டு வருவதக கூறினார். திமுக ஆட்சியை காட்டிலும் 2400 எம்.எல்.டி தண்ணீர் கூடுதல கொடுப்பதாகவும் தெரிவித்தார். பொய்யன வாக்குறுதிகள் கொடுத்து திமுக வெற்றி பெற்றதை மக்கள் புரிந்துள்ளனர், எனவே அதன் முடிவை உள்ளாட்சி தேர்தலில் தெரியும் எனவும் சுட்டிக்காட்டினார்

பா.ஜக தமிழகத்திற்கு எந்த துரோகமும் செய்யவில்லை எனவும், திமுக- காங்கிரஸ் கூட்டபி மத்தியில் ஆட்சியில் இருந்த போது தான் தமிழகத்திற்கு துரோகம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். கொங்கு மண்டலம் திமுக வின் கோட்டையாக மாறிவிட்டது என ஸ்டாலின் தெரிவித்த கருத்திற்கு மறுப்பு தெரிவித்த அவர், சூலூர் எப்போது அதிமுக கோட்டை எனவும், அதிமுகவின் வாக்கு வங்கி குறையவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க