• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பால் விநியோகத்தில் புது முயற்சி – கலக்கும் சகோதரர்கள்

October 21, 2020 தண்டோரா குழு

இயற்கையான நாட்டுமாட்டு பாலை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக பொள்ளாச்சியை சேர்ந்த இளம் சகோதரர்கள் இருவர் 200 க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை வைத்து பால் விநியோகம் செய்யும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சியை சேர்ந்த சகோதரர்கள், சரவணக்குமார் மற்றும் பிரபாகரன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த எண்ணிக்கையிலான நாட்டு மாடுகளை வைத்து பால் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தற்போதைய சூழலில் பல்வேறு சத்துக்கள் நிறைந்த நாட்டுமாட்டு பால் விற்பனையை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் பொள்ளாச்சியை அடுத்த மண்ணூர் கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட நாட்டுமாடுகளை, பராமரித்து அவற்றிலிருந்து கறக்கப்படும் பாலை பொள்ளாச்சி மட்டுமின்றி கோவை நகரிலும் விநியோகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் இருவரும் இணைந்து பேசுகையில்,

கிராமப்புறங்களில் மட்டுமே விற்பனை செய்து வந்த ஏ2 வகை நாட்டுமாட்டு பால் விற்பனையை
தென்னிந்திய அளவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு ஹைலைப் மில்க் எனும் பிராண்டில் இயற்கையாக மாடுகளில் இருந்து கறக்கப்படும் பாலை மூன்று மணி நேரத்திற்குள் கண்ணாடி பாட்டிலில் வைத்து விநியோகம் செய்து வருவதாக தெரிவித்தனர்.

தற்போது ஆயிரம் லிட்டர் வரை பொள்ளாச்சி, கோவையின் சில பகுதிகளில் நேரடியாக எங்களது பணியாளர்களை கொண்டு விநியோகம் செய்து வருவதாக கூறிய சகோதரர்கள், கறக்கப்படும் பாலை, குளிரூட்டாமல், எவ்வித திரவமும் கலக்காமல், சுத்தமான பாலை, பண்ணையிலிருந்து நேரடியாக வழங்குவதால் எங்களிடம் பாலை வாங்கும் வாடிக்கையாளர்கள் தற்போது கணிசமாக அதிகரித்து வருவதாகவும், வரும் காலங்களில் மாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு தென்னிந்திய அளவில் அந்த பகுதிகளில் பால் பண்ணைகள் வைத்து இயற்கையான நாட்டுமாட்டு பாலை விநியோகம் செய்ய உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஹைலைப் பண்ணைப்பால்
வேண்டுவோர் 9952378777 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டும் பாலை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க