October 26, 2017
தண்டோரா குழு
தமிழகத்தில் உள்ள அனைத்து பால் வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆவின் பால் கொள்முதல் வாகனங்கள் உட்பட அனைத்து பால் வாகனங்களிலும்
4 மாதங்களுக்குள் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும் பால்,ஆவின் நிறுவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பால் கூட்டுறவு சங்கத்தலைவர் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இதனையடுத்து,பாலின் தரத்தை கண்டறிய லாக்டோ மீட்டர் கருவியும்,பாலின் எடையை கண்டறிய ஸ்கேனிங் கருவியும் அனைத்து பால் வாகனங்களிலும் 4 மாதங்களுக்குள் பொருத்த வேண்டும் என நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.