• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாலில் கலப்படம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு – ராஜேந்திர பாலாஜி

May 29, 2017 தண்டோரா குழு

பாலில் கலப்படம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

“பாலில் கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளார்.

சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தனியார் நிறுவனங்கள் விற்கும் பாலில் ரசாயனம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தான் தனியார் பாலில் கலப்படம் உள்ளது என நான் செய்தியாளர்களிடம் தெரிவித்தேன்.

ஆவின் பாலில் எந்த ஒரு கலப்படமும் செய்யப்படவில்லை என்பத உறுதி. ஆவின் பாலிலும் நாங்கள் சோதனை செய்தோம். பாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் இனி தமிழகத்தில் இயங்க முடியாது. நேர்மையாக நடக்கும் பால் நிறுவனங்களுக்கு அரசு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் அளிக்கும்.

பாலில் கலப்படம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வது குறித்து தமிழக முதல்வரிடம் விளக்கியுள்ளேன்.
இன்னும் 2 நாட்களில் பால் குறித்து மத்திய அரசு நிறுவனங்களுக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள மாதிரிகளின் முடிவுகள் வந்து விடும். அதன் பிறகு கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

மேலும் படிக்க