• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாலஸ்தீன முன்னாள் அதிபர் யாசர் அராபத்தின் நினைவிடத்தில் மோடி அஞ்சலி

February 10, 2018 தண்டோரா குழு

பாலஸ்தீன நாட்டுக்கு சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் அதிபர் யாசர் அராஃபத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

அரசு முறைப்பயணமாக பாலஸ்தீனம், யு.ஏ.இ. ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று ஜோர்டான் சென்றார். தலைநகர் அம்மானில் அந்நாட்டு மன்னர் இரண்டம் அப்துல்லாவை அரண்மணையில் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார். இந்நிலையில் இன்று ஜோர்டானின் அம்மான் நகரில் இருந்து பாலஸ்தீனத்தின் ரமல்லா நகருக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். இவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய பிரதமர் பாலஸ்தீனம் செல்வது இதுவே முதல்முறையாகும். இதையடுத்து, பாலஸ்தீன முன்னாள் அதிபர் யாசர் அராபத்தின் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாசுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க