• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாரம்பரிய சின்னங்களில் கிணறு ஒன்றும் இடம்பெற்றது.

May 2, 2016 தண்டோரா குழு

குஜராத் மாநிலத்தில் உள்ள படன் நகரத்தில், ராணி கி வாவ் என்ற படித்துறை கிணறு அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ, இதை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவித்து உள்ளது.

இந்தக் கிணறு பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பூமிக்கடியில் கட்டப்பட்ட இந்திய கட்டமைப்பு மிகவும் அழகு வாய்ந்த கட்டிட வடிவமைப்பின் சான்று. இந்தக் கிணறு, இந்திய கிணறுகளின் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான ஒன்று என்று யுனெஸ்கோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராஜஸ்தானிய கட்டிடக் கலையில் கட்டப்பட்டு உள்ள இந்தப் பிரமாண்டமான படித்துறை கிணறு கலைநயம் மிக்கது. மேலும், அழகிய சிற்ப வேலைகளுடன் ஏழு அடுக்குகளைக் கொண்டது.

வெள்ளம் மற்றும் புவியியல் மாற்றத்தினால் சரஸ்வதி நதி மறைந்து போயிற்று. இந்தக் கலை அழகு கொண்ட இந்தக் கிணறும் சுமார் ஏழு நூற்றாண்டுகள் பூமிக்கடியில் புதைந்து இருந்தது. அதை தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த பிறகு, இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி மையம் அதைப் பிரத்தியேகமாக காத்து வருகிறது.

மேலும், 2013 பிப்ரவரியில், இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி மையம் ராணி கி வாவ் படித்துறை கிணற்றை உலக பாரம்பரிய சின்ன பட்டியலில் சேர்க்கப் பரிந்துரை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க