• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் கூடைப்பந்து போட்டி – பிஎஸ்ஜி கல்லூரி முதலிடம்

October 17, 2019 தண்டோரா குழு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் கூடைப்பந்து போட்டி பிஷப் அப்பாசாமி
கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெற்ற இந்த கூடைப்பந்து போட்டியில் கோவை, ஈரோடு, ஊட்டி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 10-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் சுமார் 150 பேர் போட்டியில் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் இன்று இறுதிகட்ட கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.இதில் கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி முதல் பரிசும், இரண்டாவது பரிசை கிருஷ்ணம்மாள் கலை அறிவியல் கல்லூரியும், மூன்றாவது பரிசை நிர்மலா கலை அறிவியல் கல்லூரியும், நான்காவது பரிசாக ஈரோடு வெள்ளாளர் கலை அறிவியல் கல்லூரியும் பெற்றது.

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாரதியார் யுனிவர்சிட்டி உளவியல் துறை இயக்குனர் ராஜேஷ்வரன், பிஷப் அப்பாசாமி கல்லூரியின் செயலாளர் மிருணாலினி டேவிட், கல்லூரி முதல்வர் ஜெமீமா வில்சன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

மேலும் படிக்க