• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாரதியார் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் கணபதியின் ஜாமீன் மனு தள்ளுபடி

February 8, 2018 தண்டோரா குழு

கோவையில் கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் கணபதியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பல்கலைகழக துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர்
பிப் 3 ம் தேதி கைது செய்யப்பட்டனர்.அன்றைய தினம் இரவே இருவர் சார்பிலும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி் ஜான் மினோ முன்னிலையில் நடைபெற்றது.விசாரணையின் போது புலன் விசாரணை நடைபெற்று வருவதால் பதில் மனு தாக்கல் செய்ய 8 ம் தேதி வரை அவகாசம் தேவை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டு கொண்டதால்,ஜாமீன் மனு மீதான விசாரணை 8 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோவை பாரதியார் பல்கலைகழக் துணைவேந்தராக இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் மீதான ஜாமின் மனு இன்று ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கினை விசாரிக்கும் நீதிபதி ஜான்மினோ வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும்,பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள துணை வேந்தர் கணபதியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும்.

மேலும் படிக்க