• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாமக உள்ளதால் அதிமுக கூட்டணியில் சேரமாட்டோம் – பாரிவேந்தர்

February 26, 2019 தண்டோரா குழு

அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது. அதனால் அந்த கூட்டணியில் சேரமாட்டோம் என ஐஜேகே கட்சி தலைவர் பச்சமுத்து பாரிவேந்தர் கூறியுள்ளார்.

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது எனச் சொல்லிவந்த பாட்டாளி மக்கள் கட்சி வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. இக்கூட்டணி குறித்து சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதற்கு பதிலளிக்கும் விதமாக அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்ததார். கூட்டணிக்கு கட்சி தொண்டர்களில் துவங்கி, நிர்வாகிகள் வரை அனைவரையும் கலந்து பேசி முடிவு எடுத்த பின்பு அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்ததாக விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், தனியார் தொலைகாட்சி ஒன்றிக்கு பேட்டியளித்த ஐஜேகே கட்சி தலைவர் பச்சமுத்து பாரிவேந்தர், ’பாஜக கூட்டணியில் தான் ஐஜேகே உள்ளது. கடந்த மாதம் பியூஷ் கோயலை சந்தித்து பேசினேன், அதற்கு பிறகு எங்களை அழைக்கவில்லை. இரட்டை இலை சின்னத்தில் நின்று போட்டியிடுவதில் எங்களுக்கு தயக்கமில்லை. மக்கள் நீதி மய்யம், தேமுதிக, ஐஜேகே சேர்ந்து கூட்டணி அமைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது. அதனால் அந்த கூட்டணியில் சேரமாட்டோம். பாமக ஒரு தீண்டத்தகாத கட்சி விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க