October 1, 2020
தண்டோரா குழு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 17 பேரை லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது.இந்த தீர்ப்பை கண்டித்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக கோவை வடக்கு மாவட்டம் தமுமுக சார்பில் மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் கருஞ்சட்டை அணிந்து
செஞ்சிலுவை சங்கம் முன்பு கண்டன போராட்டம் நடைபெற்றது. தமுமுக மாவட்டத் துணைச் செயலாளர் ஆசிக் அஹமது வரவேற்புரை ஆற்றினார்.
இதில் கோவை வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெம் பாபு,
கோவை A. சாதிக் அலி தமுமுக மாநில செயலாளா், சர்புதீன் தமுமுக மாநில தொண்டரணி செயலாளர், முகமது ரபி தமுமுக மருத்துவ அணி மாநில துணை செயலாளர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
மேலும், மாவட்ட பொருளாளர் அப்பாஸ், துணை செயலர்கள் சாகுல் ஹமீது, ரஜாக், ஆஷிக் அஹமது, மமக துணை செயலாளர் நூர்தீன், முஹம்மது பஷீர் மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் சிராஜ்தீன் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில்சமூக இடைவெளியுடன், கருப்பு சட்டையுடன் கருப்பு முககவசம் அணிந்து ஆண்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.