September 30, 2020
தண்டோரா குழு
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது.இந்த சம்பவத்தில் பாஜகவின் மூத்த தலைவர்கள் உட்பட 49 பேர் மீது சி.பி.ஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 17 பேர் இறந்து விட்டதால்,மீதி 32 பேர் மீது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் இன்று இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, எஸ்.கே. யாதவ் வாசித்தார்.அதில்,
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, உமாபாரதி உள்ளிட்ட 32 பேரையும் விடுவித்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட செயல் கிடையாது.அத்வானி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாபர் மசூதி இடிப்பிற்கு காரணமானவர்கள் என சிபிஐயால் நிரூபிக்க முடியவில்லை.சிபிஐ வழங்கிய ஒளி மற்றும் ஒலி ஆதாரங்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்க இயலவில்லை என்றும்
தெரிவித்துள்ளது.