October 1, 2020
தண்டோரா குழு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 17 பேரை லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து
நேற்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை கண்டித்து நாடு முழுவதும் கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தின் சார்பாக இன்று மதியம் 1.30 மணியவில் உக்கடம் பகுதியில் மாவட்ட தலைவர் அபுதாஹீர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக கேம்பஸ் ப்ரண்டின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் க.அஷ்ரப் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.மாணவர்கள் திராளாக கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.