• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

April 1, 2019 தண்டோரா குழு

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

மத்திய நேரடி வரி வாரியம் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க, முதலில் 2018 ஜூலை மாதம் வரை அவகாசம் அளித்தது. பின்னர் மார்ச் 31-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய நேரடி வரி வாரியம் இன்று அறிவிப்பு ஒன்று வெளியிட்டிருந்தது அதில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. மேலும், வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் ஆதார் – பார் கார்டு இணைப்பு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க