• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு

October 19, 2017 தண்டோரா குழு

பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் 9 வயது சிறுமிக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதால், அவள் உயிரிழந்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் கஜ்ரா கிராமத்தை சேர்ந்தவர் ரம்பலக். இவர் தனது மனைவி மற்றும் 9 வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு தின கூலி பெரும் தொழிலாளி. அவருடைய மகளுக்கு கடந்த 6 நாட்களாக கடுமையான ஜுரம் இருந்துள்ளது. மகளுக்கு நல்ல சிகிச்சை கிடைக்க வேண்டும் என்று எண்ணி, சுமார் 140 கிலோமீட்டர் பயணம் செய்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தார். ஆனால், அதிக காய்ச்சலால் அவதி படும் மகளுக்கு, மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல்,
வெளிநோயாளர் துறை அட்டை வாங்கி வந்த பிறகு தான், சிகிச்சை அளிக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து உடனே, அவரும் வெளிநோயாளர் துறை அட்டை வாங்கும் இடத்திற்கு சென்றார். அங்கு மக்கள் வரிசையில் நிற்பத்தை கண்டு, தனது மகளின் நிலையை அங்கிருந்தவர்களிடம் கூறி, தனக்கு
வெளிநோயாளர் துறை அட்டையை சீக்கிரமாக வாங்க முயன்றார். ஆனால் அவரால் அதை வாங்க முடியவில்லை.இதற்கிடையில், அந்த சிறுமியின் நிலை மிகவும் மோசமாக தொடங்கியது. அந்த சிறுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் முன்பதாக, வெளிநோயாளர் துறை அட்டை வழங்கும் இடத்தில், அவள் பரிதாபமாக உயிரிழந்தாள்.

இதுமட்டுமின்றி அந்த சிறுமியின் உடலை வீட்டிற்கு அழைத்து செல்ல, அவர்களுக்கு அம்புலன்ஸ் சேவையும் மறுக்கப்பட்டது. தனியார் ஆம்புலன்ஸ் சேவையை அழைக்க அவரிடம் தேவையான பணமும் இல்லை. வேறு வழியில்லாமல், மகளின் உடலை தோளில் சுமந்துகொண்டு, மனைவியுடன் சுமார் 4 கிலோமீட்டர் நடந்துள்ளார். புல்வாரி ஷரிப் என்னும் இடத்தை அடைந்த பிறகு, அங்கிருந்து ஒரு ஆட்டோ மூலம் மகளின் உடலை தங்கள் கிராமத்திற்கு எடுத்து சென்றுள்ளார்.

மோசமான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நோயாளிக்கு, சிகிச்சை மறுக்கப்பட்ட சம்பவம் குறித்து தனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்பட வில்லை என்றும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்தார்.

மேலும் படிக்க